5 நாட்களுக்குள் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும்- உதயநிதி ஸ்டாலின்
ஐந்து நாட்களுக்குள் பொங்கல் பரிசு பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாய விலை கடையில்,பொங்கல் தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை 3000 ரூபாயை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது மக்களுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஐந்து நாட்களில் பொங்கல் பரிசு பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகள் தமிழக முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். தமிழக முழுவதும் இரண்டு 2.27 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் மற்றும் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று பொங்கல் பரிசு பணம் மற்றும் தொகுப்பு கொடுக்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்கள். ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படுகிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகப்பு மற்றும் ரொக்க பணம் வழங்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள்தான் இருக்கின்றன. மக்களின் வரவேற்பைப் பார்க்கும்போது, தி.மு.க ஆட்சிதான் மீண்டும் அமையப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது.” என்று தெரிவித்தார்.


