அண்ணாமலையை பற்றி பேச விருப்பமில்லை- உதயநிதி ஸ்டாலின்

 
அடுத்த பிறந்தநாளுக்கு நான் துணை முதல்வரா? உதயநிதி ஸ்டாலின் பதில்

மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெளிவாக சொல்லிவிட்டோம். இதில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது? என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பேட்டி

இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு சார்பாக மீடியா என்டர்டைன்மெண்ட் பிசினஸ் கான்கிளேவ் மாநாடு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஸ்டாலின், “மும்மொழி கொள்கையை வைத்து அரசியல் செய்வதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவிக்கிறார், மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெளிவாக சொல்லிவிட்டோம். இதில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது? மொழிக்காக பல உயிரை கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. தமிழர்களின் உரிமை தான் கல்வி உரிமை, மொழி உரிமை, அண்ணாமலையை பற்றி பேச விருப்பமில்லை” என்றார்.