“சசிகலா காலில் விழுந்தது தவறில்லை, அவரது காலை வாரிவிட்டது தான் தவறு”- இபிஎஸ்க்கு உதயநிதி பதிலடி

 
ச்

குறைந்தபட்சம் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைத்து அனுப்புங்கள் என மன்னார்குடியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.


பிரச்சாரத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால்  “மன்னையின் செல்லப்பிள்ளை” என அழைக்கப்பட்டவர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. மன்னார்குடி தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வென்று ஹாட்ரிக் அடித்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவிற்கு 4வது முறையாக வெற்றியை தேடி தர வேண்டும். குறைந்தபட்சம் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைத்து அனுப்புங்கள். எத்தனையோ நட்சத்திரங்கள் வரலாம், போகலாம்; ஆனால் உதயசூரியனே கிழக்கில் உதிக்கும்.


எடப்பாடி பழனிசாமி அவர்களே தயவு செய்து மோடிக்கு அடிமையாக இருக்காதீர்கள். ஜெயலலிதா, சசிகலா, தினகரனுக்கு துரோகம் செய்த அவர் டெல்லிக்கு சென்று மோடி அடிமையாக உள்ளார். சசிகலா காலில் விழுந்தது தவறில்லை, அவரது காலை வாரிவிட்டது தான் தவறு. எடப்பாடி பழனிசாமி தன்னுடைய காலை வாரிவிட்டதால்தான் நாய் கூட நன்றியுடன் இருக்கும் என சசிகலா கூறுகிறார். அவரை போல் பதவிக்காக யார் காலையும் பிடித்த அனுபவம் எனக்கு கிடையாது. ஜெயலலிதாவிற்கு துரோகம், சசிகலாவிற்கு துரோகம் என அனைவருக்கும் துரோகம் செய்துள்ள துரோக கூட்டத்திற்கு இந்த தேர்தலில் சரியான பாடம் கற்றுத்தர வேண்டும்” என்றார்.