“அதிமுக அடிமை ஆட்சி அமைய விடக்கூடாது”- உதயநிதி சூறாவளி பிரச்சாரம்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஆதிக்கவாத - அடிமை NDA கூட்டணியை 2026 தேர்தல் களத்தில் வீழ்த்துவோம். முதலமைச்சர் ஸ்டாலினின் நாடு போற்றும் நல்லாட்சி தொடர, மீண்டும் உதயசூரியன் உதிக்க, அயராது உழைப்போம். பி டீம், சி டீம்னு எத்தனை டீமை கூட்டிக்கொண்டு வந்தாலும் தமிழ்நாட்டில் திமுகதான் சாம்பியன். அதிமுக எனும் அடிமையை கூட்டிக்கொண்டு கொல்லைப்புறமாக தமிழ்நாட்டுக்குள் நுழைய பாஜக முயற்சிக்கிறது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 வழங்கப்படும்.
பெண்களுக்கு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். நான் முதல்வன் திட்டத்தில் ரூ.1,500 மாத உதவித்தொகையோடு 6 மாதம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் மோடியையும், அமித்ஷாவையும் ஓட ஓட விரட்டுவோம். ஜாடிக்கு ஏத்த முடிப்போல்.. மோடிக்கு ஏற்றவாறு எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதிமுக அடிமை ஆட்சி அமைய விடக்கூடாது. கடந்த தேர்தல் மாதிரி இல்லாமல், இந்த தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.” என்றார்.

