“பத்து தோல்வி பழனிசாமியை, மொத்த தோல்வி பழனிசாமியாக மாற்றி அனுப்புங்க”- உதயநிதி ஸ்டாலின்
பத்து தோல்வி பழனிசாமியை, மொத்த தோல்வி பழனிசாமியாக மாற்றி அனுப்புங்க என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் எம்பி டிஎன்வி டாக்டர் எஸ்.செந்தில்குமாரை ஆதரித்து, பாலக்கோடு பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு பேசினார். அப்போது கடந்த 25 ஆண்டு காலமாக எம்எல்ஏ-வாக இருப்பது கே.பி.அன்பழகன். அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.45 கோடி ஊழல் வழக்கு உள்ளது. 10 ஆயிரம் பக்கத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் சிறைக்கு செல்லப்போகிறார். கே.பி.அன்பழகன் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்னு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கே.பி.அன்பழகனால் இந்த தொகுதிக்கு எந்த திட்டம் வரவில்லை.
11.19 சதவீத பெற்று, வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்காத பாஜக, நேராகத் வந்தா மாறி மாறி வருகிறார். மோடியும், அமித்ஷாவும் மட்டும் தான் வருகிறார்கள் ஆனால் நமக்கான நிதி வரவில்லை. எனவே பாலக்கோடு தொகுதி மக்கள் இனியும் ஏமாற வேண்டாம் என்று கூறினார். இந்நிகழ்வின் போது கூட்டணி கட்சியினர் கழகத் தொண்டர்கள் பொதுமக்கள் என சுமார் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

