"வழக்கினாலும், கைது நடவடிக்கைகளாலும் திமுகவினரை ஒரு போதும் அடக்க முடியாது"- உதயநிதி ஸ்டாலின்

 
“பாஜகவைக் கண்டு அஞ்சும் முதலமைச்சர்”- உதயநிதி ஸ்டாலின்

அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் அன்பில் மகேஷ் அவர்களை கைது செய்துள்ள இந்த Circus ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக  எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், "அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் 
அன்பில் மகேஷ் அவர்களை கைது செய்துள்ள இந்த Circus ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன். திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் - விலைவாசி உயர்வு - த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் - திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி CM. சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச்சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார்.  வழக்கினாலும் - கைது நடவடிக்கைளாலும் கழக உடன்பிறப்புகளை ஒரு போதும் அடக்க முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.