82 வயதில் மீண்டும் எம்.பி., பதவி - 8-வது முறையாக வென்ற டி.ஆர்.பாலு

 
tr baalu

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் 8வது முறையாக திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு வென்றுள்ளார்.  இம்முறை அதிமுக வேட்பாளரை விட 4,87,29 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார் . அதே சமயம் இந்த தொகுதியில் 26 ஆயிரத்து 465 வாக்குகள் பெற்று ஐந்தாவது இடத்தை நோட்டா பெற்றுள்ளது. அதிமுக வேட்பாளர் தவிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ்,  நாம் தமிழர் உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

tr

இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்திற்கு 82 வயதான திமுக பொருளாளரும் , மக்களவை உறுப்பினருமான டி ஆர் பாலு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தமிழகத்தில் குறைந்த வயதான இளைஞர்களும்  நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியுள்ளனர்.   40 வயது உடைய கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் , பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு , தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோர்  நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.