#BREAKING திமுகவில் 20ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்.20 ஆம் தேதி முதல் மார்ச் 2 ம் தேதி வரை விருப்பமனு பெறலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெறவிருக்கும் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டப் பேரவை பொதுத்தேர்தலுக்கு கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் 20-2-2026 வெள்ளிக்கிழமை முதல் 2-3-2026 திங்கட்கிழமை வரை தலைமைக் கழகத்தில் விண்ணப்பித்திட வேண்டுகிறேன்.
தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் :
பொதுத் தொகுதி ரூ. 25,000/-
மகளிர்க்கும் மற்றும் தனித் தொகுதிக்கும் ரூ. 15,000/-
குறிப்பு : வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும். விண்ணப்பபடிவம் தலைமைக் கழகத்தில் ரூ..1,000/- வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

