1000 ரூபாய் கொடுத்து பெண்களை ஏமாற்றி விடலாம் என திமுகவினர் நினைக்கின்றனர் – வானதி சீனிவாசன்..!
Oct 13, 2025, 13:25 IST1760342156915
நயினார் நாகேந்திரனின், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய வானதி சீனிவாசன் திமுகவிற்கு பெண்களின் ஆதரவு கிடைக்கப் போவதில்லை என தெரிவித்தார்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என்றும், பாஜகவின் இந்த பயணத்தை வெற்றி பயணமாக மாற்ற வேண்டும் என்றும் கூறினார்.
ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பெண்களை ஏமாற்றி விடலாம் என திமுகவினர் நினைக்கின்றனர்.. ஆயிரம் ரூபாய் அல்ல, பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் கூட பெண்கள் உங்களுக்கு பெண்கள் வாக்கு அளிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


