வருகிற 29ம் தேதி தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநில அமைப்பாளர் கூட்டம்
தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் வருகிற 29ம் தேதி நடைபெறும் என மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் கூட்டம், வருகிற 29-01-2024 திங்கட்கிழமை, காலை 10.00 மணியளவில், கோவை, பீளமேடு, காளப்பட்டி சாலை “சுகுணா கலையரங்கில்”, எனது தலைமையில் நடைபெறும். கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., சிறப்புரையாற்றவுள்ளார்.
'மாணவரணி மாநில, மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்'
— DMK (@arivalayam) January 23, 2024
- மாணவரணி செயலாளர் திரு @EzhilarasanCvmp அவர்கள் அறிவிப்பு.
29-01-2024, காலை 10 மணி, சுகுணா கலையரங்கம். pic.twitter.com/7zXgsd18P9
மாநில மாணவர் அணித் தலைவர் இரா.ராஜீவ்காந்தி இணைச் செயலாளர்கள் பூவை ஜெரால்டு, எஸ்.மோகன் மற்றும் துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், திருமதி பூரணசங்கீதாசின்னமுத்து, திருமதி ஜெ. வீரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெறும். அதுபோது மாவட்ட, மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் மட்டும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.