மதுரையில் திமுக மாணவர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்..

 
மதுரையில் திமுக மாணவர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்.. மதுரையில் திமுக மாணவர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்..


 கிழடி அகழாய்வுகளை வெளியிட மறுக்கும் பாஜக அரசைக் கண்டித்து இன்று திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  

இதுகுறித்து மாணவர் அணி சார்பில் வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில், கீழடி என்கிற பெயர்ஏ பாஜக அரசுக்கு வேப்பங்காயாயகக் கசக்கிறது என்றும்,  கீழடி ஆய்வை மேற்கொள்ளவே நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.  மேலும், அகழாய்வை மேற்கொண்ட அதிகாரிகள் பாஜகவின் குரலாக ஒலிக்கவில்லை என்பதற்காக அவர்கள் தூக்கி எறியப்பட்டனர். 

கீழடி 5-ம் கட்ட அகழாய்வு பணிகள் இந்த மாதத்துடன் நிறைவு!

கடந்தகால எடப்பாடி பழனிசாமி அரசும் பாஜகவினரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு கீழடி அகழாய்வைக் கிடப்பில் போட்டது. தமிழ்நாட்டில் திமுக தலைவர் தலைமையிலான அரசு அமைந்ததும் கீழடி அகழாய்வுக்குபுத்துயிர் கொடுத்ததோரு துரிதமாக பலகட்ட ஆய்வுகள் நடத்தி அருங்காட்சியகத்தையும் கட்டியெழுப்பினார்.  

அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பாஜக அரசைக் கண்டித்து இன்று ( ஜூன் 18ம் தேதி) காலை 10 மணிக்கு மாணவர் அணி சார்பில், மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றி அறிவித்திருந்தனர்.