"கருத்துச் சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒடுக்க முயற்சிக்கும் தரங்கெட்ட திமுக அரசு" - அண்ணாமலை

 
Annamalai Annamalai

காவல்துறையை, தங்கள் ஏவல்துறையாகப் பயன்படுத்தும் போக்கை, திமுக இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், திமுகவின் இரட்டை வேடத்தையும், பிரிவினைவாத அரசியலையும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த சகோதரர் திரு @Minjursaleem அவர்களை, பெங்களூரு விமான நிலையம் வரைச் சென்று கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை. அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒடுக்க முயற்சிக்கும் தரங்கெட்ட திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். 

Annamalai

போதைப் பொருள்கள் விற்பவர்களுக்கும், கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும், கட்சிப் பதவி கொடுத்து அழகு பார்க்கும் திமுக, சமூக வலைத்தளங்களில் திமுகவை விமர்சிப்பவர்களை மட்டும், வெளிமாநிலங்களுக்குக் கூட, தேடிச் சென்று கைது செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. 


ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான தமிழகக் காவல்துறை, திமுக ஆட்சியில், சமூக விரோதிகளை எல்லாம் விட்டுவிட்டு, சமூக வலைத்தளங்களின் குரலை முடக்க மட்டுமே பயன்படுத்தப்படுவது, வருத்தத்திற்குரியதும், காவல்துறையின் மாண்பை களங்கப்படுத்துவதும் ஆகும். காவல்துறையை, தங்கள் ஏவல்துறையாகப் பயன்படுத்தும் போக்கை, திமுக இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.