கோவையில் மட்டன் (ஆடு) பிரியாணி வழங்கிய திமுகவினர்...!!

 
ee

கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகிக்கும் நிலையில் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி செய்து திமுகவினர் வழங்கி வருகின்றனர்.   திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தன்னைப் போட்டியிட்ட தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலையை விட 35ஆயிரத்திற்கும் மேற்பட்ட  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

rr

கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 2,02085 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 842 வாக்குகளை பெற்றுள்ளார்.

rrr

அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்ட சிங்கை ராமச்சந்திரன் 90337 வாக்குகளை பெற்றுள்ளார்.  திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கும் அண்ணாமலைக்கும் இடையே 39 ஆயிரத்து 133 வாக்குகள் வித்தியாசம் உள்ளன. இதனால் கிட்டத்தட்ட திமுக கோவையை கைப்பற்றிய நிலையில் மட்டன் பிரியாணி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று திமுகவினர் விமர்சித்து வந்த நிலையில் தற்போது கோவையில் அண்ணாமலையின் தோல்வி உறுதியாகி உள்ளதால் மட்டன்  (ஆடு) பிரியாணி அளித்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.