"வடலூரில் நாள் முழுவதும் 10,000 பேருக்கு அன்னதானம்"- சேகர்பாபு
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மைதானத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் "அனைத்துலக வள்ளலார் மாநாடு - 2026" இன்று காலை நடைபெற உள்ளதையொட்டி மாநாட்டு வளாகத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கொடியேற்றி வைத்து நிகழ்வில் விளக்கேற்றினார். இதனைத் தொடர்ந்து நேரு பூங்கா அருகில் தொடங்கி மாநாடு திடல் வரை 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற "சமரச சுத்த சன்மார்க்க பேரணியை" கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, கொடியேற்றத்துடன் சன்மார்க்கிகள் ஒன்று கூடி சன்மார்க்க நெறிகளை உலகுக்கு எடுத்துக் கூறும் வகையில் பதாகைகள் ஏந்தி மஞ்சள் வெள்ளை திரித்த சீருடையோடு பேரணி சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த அனைத்து உலக வள்ளலார் மாநாட்டில் தமிழக முதல்வர் பங்கேற்று வடலூர் சர்வதேச வள்ளலார் மையத்தை பகுதி இரண்டில் முடிவுற்ற முக்கிய பணிகள் பக்தர்கள் தங்கும் விடுதி மருந்தகம் திறந்து வைக்கிறார். அதோடு திருவெற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயரை சூட்டி இருக்கின்ற அரசு தமிழக முதலமைச்சர் மாநாட்டு பந்தலில் அந்த தெருவுக்குள்ளான பெயர் பலகையை திறந்து வைக்கிறார். இந்த மாநாட்டிற்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழக மட்டுமின்றி அதைத் தாண்டியும் உலக நாடுகளில் இருந்தும் சன்மார்க்கிகள் நிகழ்வில் பங்கேற்று இருக்கிறார்கள். வள்ளலாரின் வரலாறு அடங்கிய கண்காட்சிகள், மூலிகை கசாயங்கள் மூலிகை கண்காட்சிகள் பார்வைக்காகவும் வைக்கப்பட்டுள்ளது.
கருத்தரங்கம் ஆய்வரங்கம் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நாள் முழுவதும் நடைபெற இருக்கின்றது. தமிழக முதலமைச்சர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 7 முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருக்கின்றார். சன்மார்க்கிகள் தங்களுடைய வாழ்க்கை முழுவதுமாக வள்ளலாரின் போதனைகளுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டதற்காக அவர்களுக்கு சிறப்பு செய்யும் வண்ணம் மேடையில் வைத்து 27 சன்மார்க்கிகளுக்கு சிறப்பு செய்கிறார் முதலமைச்சர். மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் வள்ளலாரின் புகழுக்கு புகழ் சேர்க்கும் விதம் பல்வேறு நற்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வள்ளலார் நூறில் முப்பெரும் விழா கண்டோம், ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தினோம், ஆண்டு முழுவதும் அன்னதானம் நடத்தினோம், வள்ளலாரின் போதனைகளை கலை நிகழ்ச்சிகளாக பேச்சுப் கட்டுரை போட்டிகளாக பறைசாற்றினோம். ஆண்டு முழுவதும் இந்த நிகழ்ச்சிகளுக்கு செலவாகின்ற செலவுகளை தமிழ்நாடு முதலமைச்சரை ஏற்றுக்கொண்டு மயிலாப்பூரில் வள்ளலார் அன்னதானத் திட்டத்தை தொடங்கி வைத்தார். வள்ளலார் நூற்றாண்டு நிகழ்வின் நிறைவு விழாவில் கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டு வள்ளலாரின் தபால் முறையை வெளியிட்டு சிறப்பு செய்தார். அனைத்து உலக சர்வதேச வள்ளலார் மையத்தை கடலூரில் அமைக்க முற்பட்டு பல்வேறு நீதிமன்ற தடைகளுக்கு இடையில் ஒரு பகுதி நிறைவுற்று இன்று அந்த சன்மார்க்கிகளுக்கு அர்ப்பணிக்கின்றார். மீதமிருக்கக் கூடிய பணிகளையும் சட்டப் போராட்டத்தின் படி வென்று அதையும் மீட்டுத் நிறைவேற்றித் தருவோம். கிட்டதட்ட 100 கோடி ரூபாய் நிதி அரசு இதற்காக ஒதுக்கியுள்ளது.
2022 ம் ஆண்டில் இருந்து வள்ளலாருக்கு புகழ் பாடும் வகையில் ஒர் ஆண்டு காலம் நிகழ்வுகள் மட்டுமல்லாமல், வள்ளலார் அருளிய அந்த தினத்தை தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்து உள்ளார். தைப்பூச நாளில் வடலூரில் ஒரு நாளைக்கு பத்தாயிரம் பேருக்கு என்று மூன்று நாள் தொடர் அன்னதானத்தை தற்போது தொடங்கி நடத்தி வருகிறோம். 3.50 கோடி செலவில் வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைக்கப்பட்டு வருகிறது” என்றார்.

