“தேடப்படும் குற்றவாளியுடன் CM பயணிக்கிறாரா?” - ஆர்.எஸ்.பாரதி

 
“தேடப்படும் குற்றவாளியுடன் CM பயணிக்கிறாரா?” - ஆர்.எஸ்.பாரதி 

“தேடப்படும் குற்றவாளியுடன் CM பயணிக்கிறாரா?” - ஆர்.எஸ்.பாரதி காவல்துறையால் தேடப்படும் நபர் மாட்டுவண்டி ஓட்டுகிறார், முதல்வர் அவரோடு பயணம் செய்கிறார்; உதயநிதி மீது உடனே வழக்கு போட்ட காவல்துறை, இதில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தாராபுரம் பிரச்சாரத்தில் உதயநிதி விதிமீறலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.  ஆனால் முதல்வர் விஜய் தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது அவருக்கு மாட்டுவண்டி ஓட்டியது யார்? காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியுடன் முதல்வர் இருந்தாரே அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? அசோக் என்பவர் மீது த.வெ.கவினரே காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அமைச்சர் செங்கோட்டையன், அசோக் என்பவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "நீ சிறைக்கு போறியா, த.வெ.கவில் சேருகிறியா?" என மிரட்டியுள்ளார். இவர் இன்றும் த.வெ.கவில் கூட இணையவில்லை. இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் அசோக் உடன்தான் முதலமைச்சர் விஜய் மாட்டுவண்டியில் பயணம் செய்துள்ளார்.

உதயநிதி மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யும் காவல்துறை, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறது? தாராபுரத்தில் திமுக அவைத் தலைவர் வீட்டுக்குச் சென்ற முதல்வர் விஜய் முருங்கைக்காய் பறிக்கிறார். தோல்வி பயம் காரணமாக முதல்வர் விஜய் வீதி வீதியாக பரப்புரை மேற்கொண்டார்” என்றார்.