“தனுஷ் கட்சி ஆரம்பித்தால் ஆதவ் அங்கு போய்விடுவார்”- ஆர்.எஸ்.பாரதி

 
ச்

எனக்கென்னமோ தி.மு.க தோற்றதாக தெரியவில்லை. நாம் தோற்று காட்டியிருக்கோம் அவ்வளவு தான் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “எனக்கென்னமோ தி.மு.க தோற்றதாக தெரியவில்லை. நாம் தோற்று காட்டியிருக்கோம் அவ்வளவு தான். நாம் ஆட்சியில் இல்லாத இந்த 100 நாள் வாக்களித்த மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். அரிசியில் கை வைத்ததால் தான் காங்கிரஸ் கட்சியால் 60 ஆண்டுகளாக தலைதூக்க முடியவில்லை என்பது வரலாறு. தமிழ்நாட்டில் தி.மு.க என்ற கட்சி இல்லை என்றால் தமிழ் படமே ஓடி இருக்காது. பரந்தூர் விமான நிலையத்தை ஏன் கைவிடுகிறீர்கள் என்று கேட்டால், 'ஜி ஸ்கொயருக்கு இடம் உள்ளது’ என்கிறார்கள். ஒரு ஏக்கர் நிலம்கூட இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆந்திராவை சேர்ந்த இருவர் ஆலோசகர்களாக உள்ளார்கள். அவர்கள் சொன்னதால் தான் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டார்கள். ஆதவ் அர்ஜுனா சீசனுக்கு சீசன் ஒரு இடத்திற்கு போகக் கூடிய ஆள்.தனுஷ் கட்சி ஆரம்பிக்க போவதாக சொல்கிறார்கள். அப்படி ஆரம்பித்தால் அங்கு சென்று முதல் கையெழுத்துப் போடுபவராக ஆதவ் அர்ஜுனா தான் இருப்பார்” என்றார்.