டாஸ்மாக் டெண்டரில் மிகப்பெரிய முறைகேடு- ஆர். எஸ். பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு
டாஸ்மாக் மதுக்கடையில் 11 மதுபான பிராண்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை 24 மணி நேரத்தில் நீக்கிவிட்டார்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர். எஸ். பாரதி, "டாஸ்மாக் டெண்டறில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது. இன்னும் 6 மாதங்களில் உண்மைகள் அனைத்தும் வெட்ட வெளிச்சமாகும். டாஸ்மாக் மதுக்கடையில் 11 மதுபான பிராண்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை 24 மணி நேரத்தில் நீக்கி விட்டார்கள். ஏதோ மிகப்பெரிய ஸ்கேம் நடக்கிறது. டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த நிறுவனம் தான் அது.. இதுதொடர்பான ஃபைல்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டு இருக்கேன்...
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருப்பதை தினசரி நாளிதழை பார்த்தாலே தெரியும். சென்னை வில்லிவாக்கத்தில் சிங்கபெண் அதிரடிப்படை பெண் காவளருக்கு பாலியல் தொல்லை அளித்தவர் சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார். லண்டனில் இருந்து அழைப்பு வந்ததும் புகாருக்குள்ளானவர் விடுவீக்கப்பட்டார். இதுதான் தமிழகத்தின் நிலை. தவெக ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித்திரிக்கின்றனர். எல்லா கிரிமினல்ஸ்களும் இருக்கும் இடம் தவெக" என்றார்.

