“மதிமுக புறந்தள்ள வேண்டிய கட்சி! நேற்று முளைத்த காளான் மாணிக்கம் தாகூர்” - ஆர்.எஸ்.பாரதி

 
ச்

அடிக்கடி வாக்குறுதி மாறக் கூடியவர் வைகோ! மு.க.ஸ்டாலின் உடன் இருப்பேன், உதயநிதி உடன் இருப்பேன் என்று சொன்னவர் இன்று எங்கே? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “வைகோ பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. அரசியலில் ஒவ்வொரு முறையும் அவர் எப்படி வேஷம் போட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். வைகோ யார் என்பதை தற்போது காட்டி விட்டார்.  அவருடன் இருந்தவர்கள் வெளியேறி, அனாதையாக்கப்பட்ட விரக்தியில்தான் வைகோ இப்படி பேசி வருகிறார். மதிமுகவினர் திமுகவில் இணைந்து வருவதால்தான் வைகோ புலம்பி வருகிறார். அடிக்கடி வாக்குறுதி மாறக் கூடியவர் வைகோ.  மதிமுக ஆரம்பித்தபோது இருந்தவர்கள் இப்போது இல்லை.  மு.க.ஸ்டாலின் உடன் இருப்பேன், உதயநிதி உடன் இருப்பேன் என்று சொன்னவர் இன்று எங்கே? வைகோ எப்பேர்பட்ட ஆள் என்பதை விஜய்க்கே புரிய வச்சிட்டார். மதிமுக புறந்தள்ள வேண்டிய கட்சி. எங்களுக்கு வேற வேலைகள் இருக்கிறது. விமர்சிப்பவர்களை திருப்பி அடிப்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம்தாகூர் தெரிவிக்கிறார். அவர் நேற்று  முளைத்த காளான். நேருவே எங்களை கண்டு பயந்து ஓடியிருக்கிறார்” என்றார்.