மிட்நைட் மசாலா போன்று விடியற்காலை 3 மணிக்கு ரெய்டு- ஆர்.எஸ்.பாரதி

 
rs

அமலாக்கத் துறை தோன்றிய நாள்முதல் இதுவரை நடத்தப்பட்ட ரெய்டுகளில், எத்தனை வழக்குகள் போட்டு, நிரூபிக்கப்பட்டு இருக்கிறது? என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். 

rs bharathi

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதியிடம், இதற்குமுன்பும் வருமான வரித் துறையின் ரெய்டு நடைபெற்று இருக்கிறதே, அந்த அதிகாரிகளின் வாகனங்கள் தாக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லையே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “முன்பு நடந்த ரெய்டு எல்லாம், காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்து நடைபெற்றது. ஆனால், இது மிட்நைட் மசாலா போன்று - விடியற்காலை 3 மணிக்கு வந்து ஒரு வீட்டின் கதவைத் தட்டினால், தட்டுபவன் கொலைகாரனா? திருட வந்தானா? என்று சந்தேகப்படக் கூடிய வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? ஆகவே, இதுபோன்று ரெய்டு செய்யப் போகும்பொழுது, காவல்துறையினரோடு செல்வதுதான் வழக்கம். இதுவரை தமிழ்நாட்டில் நடைபெற்ற ரெய்டுகளில் காவல்துறையினர் இல்லாமல் சென்றிருக்கார்களா என்று சொல்லட்டும்” என்றார். 

Image

தொடர்ந்து வருமான வரித் துறை அதிகாரிகளின் வாகனங்களை வழிமறித்துத் தாக்கி இருக்கிறார்களே? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அவர்களுடைய வாகனங்களை தெரியாமல் தாக்கியிருக்கிறார்கள். அடியாட்களும் வண்டியில் வந்துதான் தாக்குகிறார்கள். எங்களுக்குத் தகவல் கிடைத்ததும், உடனடியாக அங்கே இருந்த அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர். காவல்துறையினரும் அங்கே சென்றுவிட்டார்கள்.

Image

சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படவில்லை, அங்கே நடைபெற்ற சம்பவம் நியாயமானதுதான் என்று நான் சொல்லவில்லை. நடந்தது தவறுதான். ஆனால், உடனே அதனைத் தடுத்துவிட்டோம். அப்படியில்லாமல், காவல்துறையினரின் உதவியோடு அடிக்கச் செய்திருந்தால், நீங்கள் சொல்வதுபோன்று தவறு.   ஆனால், காவல்துறையினரை அனுப்பி, அங்கே இருப்பவர்களை கலைந்து செல்லுமாறு கூறினோம்.   இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், காவல்துறை எஸ்.பி.யிடம் கேளுங்கள். முழுத் தகவல்களையும் சொல்வார் என பதிலளித்தார்.