உதயநிதியை கைது செய்த தவெக அரசுக்கு கண்டனம்- திமுக தீர்மானம்

 
s

மேகதாது விவகாரம், தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குற்றங்கள் ஆகியவற்றை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில் நடந்த திமுக வழக்கறிஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக சட்டத் துறை ஆலோசனை கூட்டத்தில் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை கைது செய்த தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தீர்மானம்
  • மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசின் அலட்சியப்போக்கை கண்டித்து தீர்மானம்
  • வாக்கு இயந்திரத்துக்கு மாற்றாக வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வலியுறுத்தி தீர்மானம்
  • ஸ்டாலினை அருவருக்கத்தக்க வகையில் விமர்சிப்போர் மீது புகார் தந்தும் நடவடிக்கை இல்லை என திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
  • கொலை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • மேகதாது விவகாரத்தில் த.வெ.க அரசின் அலட்சிய போக்கிற்கு கண்டனம்