இடதுசாரிகளுக்கு திமுக உரிய அங்கீகாரம் தர மறுத்துவிட்டது - கே.பாலகிருஷ்ணன்..!!

 
W

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். 

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். மீண்டும் ஆட்சி அமைக்கும் திமுகவுக்கு வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். 

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை என்கிற செய்தியை தான் எல்லா கருத்துக்கணிப்புகளும் தெளிவாக கூறியுள்ளனர். பாஜக எத்தனை பகல் வேடம் போட்டாலும். மோடி, அமித்ஷா தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை படை எடுத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு இடம் அளிக்க மாட்டார்கள் என்பது இந்த தேர்தலில் மீண்டும் உறுதியாகியுள்ளது. 

இடதுசாரிகளுக்கு ஆறு இடங்களை ஒதுக்க வேண்டும் என எவ்வளவோ வற்புறுத்தியும் திமுக தலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை. இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் தருவதற்கு திமுக மறுத்துவிட்டது என்பது தான் உண்மை. 

தேர்தல் முடிவுக்கு பிறகு அமைய உள்ள ஆட்சி ஏற்கனவே இருந்த திமுக ஆட்சியைப் போல் இருக்கக் கூடாது. இன்று இளைஞர் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் பூதாகரமாக வளர்ந்துள்ளது. எல்லா இடங்களிலும் பணி நிரந்தரம் இல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்களை மட்டும் வைத்து வேலை வாங்கும் நிலைமை உள்ளது. வருகிற ஆட்சியில் அப்படிப்பட்ட நிலைமை ஏற்படக் கூடாது. ஏற்கனவே அனைத்து நிலைகளிலும் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ள அனைவரையும் பணி நிரந்தரம் செய்வதோடு, அனைத்து துறை அரசு அலுவலகங்களில் உள்ள பல லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 

திமுக அரசு அமைந்தாலும் இது போன்ற கொள்கை ரீதியான பிரச்சனைகளை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்து போராடுவோம்.

வேற எந்த தேர்தலையும் விட இந்த தேர்தலில் இளைஞர்களிடம் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்கிற அரசியல் புரிதல் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி வரவேற்கத்தக்கது. 

பாஜக இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்தாலும், திமுக ஆட்சி கடைப்பிடிக்ககூடிய கொள்கையில் மக்கள் நலன் பாதிக்கப்படும் போது குறிப்பாக பணி நிரந்தரம், தொழிலாளிகள் மீதான அடக்குமுறை, வழக்கு ரத்து இப்படிப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியான போராட்டங்களை முன்னெடுக்கும். என தெரிவித்தார்.