“கொச்சையான பேச்சுகளை பேசும் மனிதராக முதலமைச்சர் விஜய் மாறியிருக்கிறார்”- திமுக
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் ஆணவப் பேச்சைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் வரும் 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, முதல்வர் ஜோசப் விஜயனைக் கண்டித்து திமுக போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. வரும் 12-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் திமுகவின் போராட்டங்கள் நடைபெறும். மிசா கொடுமைகளை அனுபவித்த ஸ்டாலினின் தியாகத்தை சட்டமன்றத்தில் கொச்சைப்படுத்தி விட்டதாக முதலமைச்சர் விஜயை கண்டித்து, வரும் 12ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. ஆட்சியின் தோல்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக் கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் மனிதராக முதலமைச்சர் விஜய் மாறியிருக்கிறார். சட்டமன்றத்தில் முதலமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

