திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருமாவளவன் திடீர் சந்திப்பு..!
May 7, 2026, 13:15 IST1778139939840
ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு நடத்தி வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். திமுகவின் சட்டப்பேரவைத் தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக மு.க.ஸ்டாலின், ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், திருமாவளவன் திடீரென வருகை தந்துள்ளார். அதே போல் இடதுசாரி கட்சி தலைவர்களுக்கும் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

