சபாநாயகர், துணை சபாநாயகருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

 
Stalin

தமிழ்நாடு சட்டப் பேரவையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.சி.டி. பிரபாகர், துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவிசங்கர் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.

மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்த மரபினையும், பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்.

ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை தான் அதிகம். அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு!

அதை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில் பேரவை தலைவர் மற்றும் துணைத் தலைவர் இருவரும் அவையை வழி நடத்துவார்கள் என நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.