"நோட்டா கிட்ட வச்சுக்கோ.... எங்க ஏட்டா கிட்ட வேண்டாம்..." பாஜகவுக்கு திமுக போஸ்டரில் பதிலடி

 
போஸ்டர்

கரூரில் மின்சாரத்துறை அமைச்சரை கேலி செய்து போஸ்டர் ஒட்டிய பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கோவையில் திமுகவினர் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வைரலாகிவருகிறது. 

v senthil balaji, பாஜக Vs செந்தில் பாலாஜி: கரூர் முழுவதும் போஸ்டர்.. செந்தில்  பாலாஜியை கலங்கடித்த பாஜக! - karur district bjp poster criticized against  minister senthil balaji ...

கரூர் மாவட்டத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கேலி செய்யும் விதமாக பாஜகவினர் போஸ்டர் ஒட்டி இருந்தனர். அதில் “5,000 கோடிக்கு அதிபதியாக்கிய BGR ஊழல்" என்ற வாசகத்தை எழுதி தராசு தட்டில் ஒரு பக்கம்  பணக்கட்டுகளும் மறுபக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமர்ந்திருப்பது போலும் அமைச்சர் செந்தில் பாலாஜி பணத்தை விட பலமானவர் என்பதை போல் தராசு தட்டு அமைச்சிருக்கும் பக்கத்தில் சாய்ந்திருப்பது போன்று சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர். 

இந்நிலையில் கோவை கிழக்கு மாவட்ட திமுகவினர் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பாஜகவை மறைமுகமாக விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களில், "நோட்டா கிட்ட வச்சுக்கோ.... எங்க ஏட்டா கிட்ட வேண்டாம்..." என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை ரயில் நிலையம், கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் கருத்து மோதல், வாக்குவாதம் நடைபெறும் நிலையில் சமீப காலமாக போஸ்டர்களில் கட்சிகளை விமர்சித்து ஒட்டப்படும் நிகழ்வுகள் டிரென்டு ஆகி வருகிறது.