பிரதமரின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய திமுக மனு

 
மோடி தியானம்

கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் மனு அளித்துள்ளது.

கோடை விடுமுறைக்காக நாடு முழுவதிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் முக்கிய இடமாக கன்னியாகுமரி உள்ளது. சூரிய உதய தரிசனம் அங்கு முக்கியமானது என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலையிலேயே அங்கு வருகை தருகின்றனர். மேலும், அங்குள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள் முக்கியமாக செல்லும் இடங்களாகும். மோடியின் இந்த 3 நாள் பயண நிகழ்ச்சியால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி படகு குழாம் தொடங்கி அனைத்துப் பகுதிகளிலும் 4000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் வருவதற்கு முன்பாகவே அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்வாதாரத்தை அமைத்துள்ள வியாபாரிகளும், மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவில், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் தியானத்தில் ஈடுபடுவடுது தேர்தல் விதிமீறல் எனக் குறிப்பிட்டுள்ளது.