சீமான் உருவ பொம்மையை மின்கம்பத்தில் கட்டி செருப்பு மாலை அணிவித்ததால் பரபரப்பு

 
ச்

பொள்ளாச்சி நகர திமுக சார்பில் சீமான் உருவ பொம்மையை மத்திய பேருந்து நிலையம் முன்பு மின்கம்பத்தில் கட்டி செருப்பு மாலை அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Image

தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு தரப்பினர் அவர் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்தும் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு நகர திமுக செயலாளர் நவநீதன் தலைமையில் சீமான் உருவ பொம்மையை மின்கம்பத்தில் 
தூக்கிலிட்டும், செருப்பு மாலை அணிவித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். 


 


 


மேலும் பாரதிய ஜனதா கட்சியுடன் கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் சீமான் ஒழிக எனவும்  தந்தை பெரியார்  வாழ்க எனவும் கோசமிட்டு சீமான் உருவ பொம்மை மின்கம்பத்தில் தூக்கிலிட்டு செருப்பு மாலை அணிவித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.