"முதல்வர் Sleep Mode-ல் உள்ளார்.. சீக்கிரம் Action Mode-க்கு வர வேண்டும்"- பரந்தாமன்
தமிழ்நாட்டுக்கு தொழில் துறை மந்திரியா இல்ல ஆந்திராவுக்கு தொழில் துறை மந்திரியான்னு தெரியல, டெய்லி ஒரு கம்பெனியை மூடி அனுப்புறாங்க என திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன், “தமிழ்நாட்டில் அரிசி,பருப்பு,போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலை உயரவில்லை என்று உணவுத்துறை அமைச்சர் சொல்கிறார், அவர் அரிசி வாங்கி சோறுதான் சாப்பிடுகிறாரா? என்ற கேள்வி எழுகிறது. நானும் அவரும் நேரடியாக மார்க்கெட்டிற்குச் சென்று பொருட்களை வாங்குவோம். அப்போது விலைவாசி ஏறியுள்ளது என்று நான் நிரூபித்துவிட்டால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அவர் தயாரா? விலை வாசி ஏற்றத்தை பற்றி முதலமைச்சர் பேச வேண்டும். மாற்றம் தருவேன் எனக்கூறிய விஜய் சர்க்கார்.. மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது மட்டுமில்லாமல் விலையேற்றத்தையும் கொடுத்து இருக்கு. தமிழ்நாட்டுக்கு தொழில் துறை மந்திரியா இல்ல ஆந்திராவுக்கு தொழில் துறை மந்திரியான்னு தெரியல, டெய்லி ஒரு கம்பெனியை மூடி அனுப்புறாங்க. முதல்வர் Sleep Mode-ல் உள்ளார் சீக்கிரம் Action Mode-க்கு வர வேண்டும்.தவெக எவ்வளவு அடி வாங்கினாலும் வெளியே தெரியாம சைலன்டா இருக்காங்க...அமைச்சர் ஆதவ் எங்க போனாரு..முதல்வர் விஜய் ஏன் இன்னும் பேசாம இருக்காரு..தயவு செய்து அரசியலை கொச்சைப்படுத்தாதீங்க” என்றார்.

