அக்டோபர் முதல் மதுராந்தகம் திமுகவின் தொகுதி- பரந்தாமன்
மதுராந்தகம் (தனி) இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பரந்தாமன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பரந்தாமன், “தவெக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச்சொல்லி, மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்று... வெற்றிக் கனியை கொண்டுவந்து எங்கள் தலைவரிடம் சமர்பிப்போம். இந்த அக்டோபர் முதல் இரு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) திமுகவின் தொகுதிகளாக மாறும். தவெக ஆட்சியில் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த ஆட்சியின் 100 நாட்களில் நடந்த அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி வெற்றி பெறுவோம். மதுராந்தகம், தாராபுரம் இரு தொகுதியும் கடந்த காலத்தில் திமுகவிற்கு இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் அக்டோபர் முதல் அவை திமுகவின் தொகுதியாக மாறும். எங்களுடைய சாதனைகளை எடுத்துச் சொல்லி வாக்குகள் பெறுவோம். இதுவே மைனாரிட்டி அரசு தான், அவர்களிடம் என்ன பலம் இருக்கிறது” என்றார்.

