அரசு ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டி தாக்கிய திமுக ஊராட்சித் தலைவர்

ஈரோடு மாவட்டம் பூந்துறைசேமூரில் மணிகண்டன் என்ற அரசு ஊழியரை, விடியா திமுக ஊராட்சித் தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் துப்பாக்கி முனையில் மிரட்டி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஈரோடு மாவட்டம் பூந்துறைசேமூரில் மணிகண்டன் என்ற அரசு ஊழியரை, விடியா திமுக ஊராட்சித் தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் துப்பாக்கி முனையில் மிரட்டி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கண்டனத்திற்குரியது. மக்கள் புகாரளித்தால், மிரட்டலும், பொய்வழக்கும், தாக்குதலும் மட்டுமே பதிலாகக் கொண்டிருந்த திமுகவினர், இப்போது ஒருபடி மேலே சென்று குடிநீர் வழங்கவில்லை என்று புகாரளித்ததற்கு துப்பாக்கி முனையில் மிரட்டத் துணிந்திருப்பது, விடியா திமுக ஆட்சியில் திமுகவினரால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடுத்த பரிணாமத்தை எட்டியுள்ளதையே காட்டுகிறது.
ஈரோடு மாவட்டம் பூந்துறைசேமூரில் மணிகண்டன் என்ற அரசு ஊழியரை, விடியா திமுக ஊராட்சித் தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் துப்பாக்கி முனையில் மிரட்டி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கண்டனத்திற்குரியது.
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) June 23, 2024
மக்கள் புகாரளித்தால், மிரட்டலும், பொய்வழக்கும், தாக்குதலும் மட்டுமே பதிலாகக் கொண்டிருந்த… pic.twitter.com/P7oSVCQeTT
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியும், துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தன் கட்சிக்காரர்களே துப்பாக்கியால் மிரட்டுமளவு அதிகார மமதையின் உச்சத்தில் இருக்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம். சம்மந்தப்பட்ட திமுக ஊராட்சி தலைவர் தங்க தமிழ்ச்செல்வனை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன், துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழித்து சட்டம் ஒழுங்கை இந்த விடியா திமுக அரசு நிலைநாட்ட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.