உதயநிதி பேசியதை ஒட்டி வெட்டி வெளியிட்டுள்ளனர்- என்.ஆர்.இளங்கோ

 
ச்

சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்றே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என திமுக மூத்த வழக்கறிஞரும், சட்டத்துறை செயலாளருமான என்.ஆர். இளங்கோ கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மூத்த வழக்கறிஞரும், சட்டத்துறை செயலாளருமான என்.ஆர். இளங்கோ, “சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்றே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை காவல்துறையினர் தெரிந்தே மீறியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் நாளை சட்டமன்றத்திற்கு வரக்கூடாது என்ற நோக்கத்தில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் ஒருமுறை, சட்டத்தின் மூலம் சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையும், அவரைக் கைது செய்த நடவடிக்கையும் சட்டத்திற்குப் புறம்பானது என்று நீதிமன்றத்தில் வாதிட்டோம். 

நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறி, தஞ்சாவூர் காவல்துறையினர் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்துள்ளனர். மேலும், விசாரணையின்போது காவல்துறையின் அப்பட்டமான அடக்குமுறையையும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினோம். உதயநிதியை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது. உதயநிதி பேசியதன் உள் அர்த்தத்தை திரித்து பரப்பியுள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் தவறான தகவல் பதியப்பட்டுள்ளதை ஐகோர்ட்டில் சுட்டிக்காட்டினோம். தஞ்சையில் உதயநிதி பேசியதை ஒட்டி வெட்டி வெளியிட்டுள்ளனர். நேற்றிரவே FIR பதியப்பட்டு இன்று காலை உதயநிதியை கைது செய்ய வந்துள்ளனர்” என்றார்.