இன்று கூடுகிறது திமுக எம்.பி.க்கள் கூட்டம்!!

 
ttn

சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆளுங்கட்சியாக அமர்ந்து, ஆறு மாதங்களுக்கு மேலாகிறது.  அதேபோல் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிகப்படியான இடங்களில் கைப்பற்றியிருந்தது. இவற்றை போலவே திமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மகத்தான வெற்றியை பெற வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

stalin

இந்நிலையில் நகராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.  விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட திமுக தலைமை அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நகர்ப்புற உறுப்பினர் பதவிக்கு 10,000 ரூபாயும்,  பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு 2,500 ரூபாயும் விருப்பமான கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

stalin

திமுகவின் இந்த விருப்பமனு விநியோக அறிவிப்பால்,  விரைவில் நகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.  அதேபோல் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.  இதில் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார். காலை  10:30 மணிக்கு நடைபெறும் இந்த எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில்,  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுகவின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.