தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தி.மு.க எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்

 
dmk

திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. தமிழக நிதி விவகாரம் பற்றி விவாதங்களை எழுப்புவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் பல்வேறு ஆலோசனைகளை எம்.பிக்களுக்கு முதலமைச்சர் மு.க.முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதில் பேசிய முதலமைச்சர், "2026 தேர்தலிலும் திமுகவுக்கே மக்கள் ஆதரவு அளிப்பார்கள். எதிர்க்கட்சிகளின் பொய்குற்றச்சாட்டுகளை நம்ப மாட்டார்கள். திமுக அரசின் சாதனைகளைப் பொறுக்கமுடியாமல், விமர்சிப்பவர்களை மக்கள் ஒருநாளும் ஏற்க மாட்டார்கள் என கூறினார். 

இந்த நிலையில், திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் செய்திட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட நடத்தை விதிகள் உருவாக்கிட கோரி தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது.