செஸ் ஒலிம்பியாட் போட்டி - பிரதமருடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு!!

 
tn

இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது 28ஆம் தேதி  முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். 

ttn

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க, பிரதமர் மோடியை ம் டெல்லி சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைக்க இருந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக  முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

tn

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா அழைப்பிதழை வரும் 19ம் தேதி பிரதமரை நேரில் சந்தித்து வழங்குகின்றனர்.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர் பாலு, கனிமொழி,விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலாளர் ஆகியோர் நேரில் சந்தித்து வழங்க உள்ளனர். முன்னதாக  தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை பிரதமர் நரேந்திர மோடி  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார். அப்போது சென்னையில் வரும் ஜூலை 28ஆம் தேதி துவங்க உள்ள உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு தான்,  தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக , நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு,  கனிமொழி , விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும் , துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் முதல்வர்  ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.