தவெக ஆட்சியில் தமிழ்நாடே அச்சத்தில் உறைந்து போயிருக்கிறது- கனிமொழி
"விஜய் மாமா" என்று அழைத்து உங்களுக்கு ஓட்டுக் கேட்ட குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால், முதலமைச்சர் காவல்துறையைக் கையில் வைத்திருந்து என்ன பயன்? என கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை, மேலூர் அருகே நேற்றைய தினம் காணாமல் போன 7 வயது சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பில்லை; தவெக ஆட்சியில் தமிழ்நாடே அச்சத்தில் உறைந்து போயிருக்கிறது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 26, 2026
"விஜய் மாமா" என்று அழைத்து உங்களுக்கு ஓட்டுக் கேட்ட…
இதுகுறித்து கனிமொழி எம்பி தனது எக்ஸ் தளத்தில், "மதுரை, மேலூர் அருகே நேற்றைய தினம் காணாமல் போன 7 வயது சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பில்லை; தவெக ஆட்சியில் தமிழ்நாடே அச்சத்தில் உறைந்து போயிருக்கிறது. "விஜய் மாமா" என்று அழைத்து உங்களுக்கு ஓட்டுக் கேட்ட குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால், முதலமைச்சர் காவல்துறையைக் கையில் வைத்திருந்து என்ன பயன்? உங்களால் கவனிக்க முடியவில்லை என்றால் அந்தத் துறையை வேறு யாரிடமாவது கொடுத்துவிடுங்கள்; மழலைகளின் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

