“தவெக தூய சக்தி இல்லை, திருட்டு கட்சி”- கனிமொழி

 
“தவெக தீயசக்தி இல்லை, திருட்டு கட்சி”- கனிமொழி

வண்டலூர் அருகே, 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளிக்கூடத்திலேயே பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக திமுக எம்பி கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார்.


மதுராந்தகத்தில் தி.மு.க மகளிர் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய கனிமொழி எம்.பி, “ஒருமுறை பரிதாபப்பட்டு நீங்கள் வாக்களித்தால் தமிழ்நாடே போய்விட்டது. இடைத்தேர்தலும் வந்துவிட்டது. இப்போதும் நீங்கள் பரிதாபப்பட்டால் மீண்டும் இங்கு இடைத்தேர்தல்தான் வரும். அதிமுகவுக்கு வாக்களித்தால் மீண்டும் இடைத்தேர்தல் வரும். தூய சக்தி என தவெக சொல்கிறது. பிற கட்சிகளின் MLA-க்களை திருடுவதால் இனி அக்கட்சி திருட்டு கட்சி என அழைக்கப்படும். வண்டலூர் அருகே, 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளிக்கூடத்திலேயே பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. முதலமைச்சர் வருகைக்காக இந்தக் கொடூரத்தை மூடிமறைக்க, தேர்வுக்குப் பயந்து பொய் சொல்வதாக, பாதிக்கப்பட்ட மாணவி மீது இந்த அரசு குற்றம்சாட்டுகிறது.

பட்டினபாக்கத்தில் தலைமை செயலகம் கொண்டு வர தவெக அரசு தீவிரம் காட்டி வருகின்றது. மீனவ மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்தனர். ஆனால் செய்யூரில் விமான நிலையம் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் இங்கு விவசாயம் இல்லையா இங்கு பாதிப்பு வராதா? வீட்டில் இருந்த குழந்தையைக் கடத்திச் சென்று வன்கொடுமை செய்திருக்கிறார்கள். இதுவரை இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்று அதிகாரிகள் வெளியே சொல்லவில்லை. நண்பாஸ், நம்பிஸ் என்று சொல்லும் முதலமைச்சர் விஜய், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஒரு செய்தியைக் கூட சொல்லவில்லை. ஆனால், நமது கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, "நாங்கள் இருக்கிறோம்" என்று அவருக்குத் தைரியத்தைக் கொடுத்தார். இதுதான் எங்கள் தலைவர். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காகச் சிந்திக்கக்கூடிய, அவர்களது வலிகளை மனதில் ஏந்தக்கூடிய ஒரே தலைவன் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்.” என்றார்.