திட்டமிட்டு நிறுத்துவது நோக்கமா?- கனிமொழி எம்பி

 
ஈபிஎஸ் செய்திருப்பது துரோகம்- கனிமொழி

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காக இதையும் திட்டமிட்டு மறைமுகமாக நிறுத்துவது தான் அரசின் நோக்கமா? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலுள்ள உயர்கல்வி நிலையங்களில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித்தொகையை வழங்காமல், அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது த.வெ.க. அரசு. தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காக, இதையும் திட்டமிட்டு மறைமுகமாக செயலிழக்கச் செய்து நிறுத்துவதுதான் இந்த அரசின் நோக்கமா?உடனடியாக நிலுவையிலுள்ள உதவித்தொகையை விடுவித்து, மாணவர்களின் கல்வியைத் தடையின்றி தொடரச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.