"கட்சிக்காரர் மீது நடவடிக்கை எடுங்கள்"- கனிமொழி எம்.பி

 
Kanimozhi

குளித்தலை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கடத்த முயன்ற தவெக ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “குளித்தலை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அப்பெண்ணை கடத்த முயன்ற கிருஷ்ணராயபுரம் தவெக ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?  காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.  விஜய் அவர்கள், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தன் கட்சிக்காரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, முதலில் தன் கட்சியினருக்கு சுயஒழுக்கம் குறித்து பாடம் எடுக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.