தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம்- கனிமொழி
தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம் என திமுக எம்பி கனிமொழிம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உடலை கூறு கூறாக வெட்டிப் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியின் சடலத்தை மீட்ட குளத்தூர் போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸார் சிறுமியின் உடலை கூராய்வுக்கு அனுப்ப முயன்றபோது பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போலீசுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 11, 2026
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அச்சமூக விரோதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை…
இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அச்சமூக விரோதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

