“ஸ்டாலினால் மட்டும்தான் பெண்களுக்கான ஆட்சியை நடத்த முடியும்”- கனிமொழி

 
“ஸ்டாலினால் மட்டும்தான் பெண்களுக்கான ஆட்சியை நடத்த முடியும்”- கனிமொழி “ஸ்டாலினால் மட்டும்தான் பெண்களுக்கான ஆட்சியை நடத்த முடியும்”- கனிமொழி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மட்டும்தான் பெண்களுக்கான ஆட்சியை நடத்த முடியும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் நடைபெற்ற டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் உரையாற்றிய திமுக எம்பி கனிமொழி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மட்டும்தான் பெண்களுக்கான ஆட்சியை நடத்த முடியும். அதிமுக ஸ்கூட்டி தருகிறேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்ததே, அதனை நிறைவேற்றியதா? ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. டபுள் இஞ்சின் அரசு உள்ள மாநிலங்கள் முதலிடத்தில் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி உரை வாசிக்காமல் புறக்கணிக்கிறார் ஆளுநர் ரவி. திராவிட எஞ்சினுக்கு முன் பாஜகவின் டபுள் எஞ்சின் காலாவதியான எஞ்சின், தோல்வி அடைந்த எஞ்சின. பிரதமர் அண்மையில் தமிழ்நாடு வந்தார். 45 நிமிடங்கள் பேசினார். ஆனால் ஒருமுறைகூட அதிமுக பெயரை சொல்லவில்லை. ஒரு கட்சியின் பெயரையே நிராகரிக்கக்கூடிய இடத்தில் நீங்கள் கூட்டணி வைத்து இருக்கிறீர்கள்.


இது ஸ்டாலினின் படை, இது வேறு எந்தப்பக்கமும் திரும்பாது. தமிழ்நாட்டு பெண்கள் மிகவும் புத்திசாலிகள். நீங்கள் பாஜக எந்த கனவில் இங்கு வந்து இறங்கினாலும் சரியான பாடத்தை தமிழ்ப் பெண்கள் உங்களுக்கு புகட்டுவார்கள். ஆளுநர்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 700 கோடி செலவிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணிக்கிறார். எங்கு செல்ல வேண்டும், எங்கு விலக வேண்டும் என மக்களுக்கு நன்றாக தெரியும். யாரையும் நம்பி தமிழ்நாட்டின் பெண்கள் ஏமாற மாட்டார்கள். மாநிலத்திற்கு ஆளுநர் வேண்டாம் என திமுக நீண்ட நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆளுநர்களால் மாநிலங்களுக்கு எந்த பயனும் இல்லை” என்றார்.