கலை என்பது சமூகத்தை செதுக்கும் உளி- கனிமொழி
Updated: Dec 26, 2025, 20:58 IST1766762889569
பறையைக் கூட வேறு யார் யாரோ எடுத்து வாசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் அது எங்களுடைய இசை என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் எம்.பி.கனிமொழி, இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். அதன்பின் மார்கழியில் மக்களிசை மேடையில் உரையாற்றிய திமுக கனிமொழி எம்.பி., “கலை என்பது சமூகத்தை செதுக்கக்கூடிய உளியாக, சம்மட்டியாக இருக்க வேண்டும். மார்கழியில் மக்களிசை என்பது மாற்று அரசியல் பேசுவதற்கான மேடை. நம்முடைய கலை வடிவத்தை பிடுங்கிக் கொண்டார்கள். பறையைக் கூட வேறு யார் யாரோ எடுத்து வாசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அது எங்களுடைய இசை. நம்முடைய இசை என்பதை உரக்க சொல்லுவோம்” எனக் கூறினார்.


