முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் 15,000 கோடி முதலீடு 17,000 பேருக்கு வேலைவாய்ப்பு- கனிமொழி எம்பி

 
Kanimozhi Kanimozhi

லண்டன்,ஜெர்மனி வெளிநாட்டு பயணம் மூலம் 33 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 15 ஆயிரம் கோடிக்கான முதலீட்டை ஈர்த்து 17 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழிவகை செய்துள்ளார் என கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.

kanimozhi

திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, “கொள்கைக்காக இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே கட்சி திமுக தான்,கீழடி நாகரீகத்தை உலகெங்கும் கொண்டு சேர்த்தவர் நம் முதலமைச்சர். உலகின் மானுட வரலாற்றை தமிழ்நாட்டில் இருந்து தான் எழுத வேண்டும் என அறிவியல் ரீதியாக நிரூபித்தவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் என்றும்,பெரியாரின் சேவைகளை,சமூக சீர்திருத்தங்களை பற்றி உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய மக்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் படத்தை திறந்து அவரைப் பற்றிய புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார் நம் முதலமைச்சர், நான்கரை ஆண்டுகளாக  அரசியலுக்கு லீவு போட்டு சென்ற எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் என்ற பெயரில் முதலமைச்சரைப் பற்றி குறை கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாட்டு மகளிர்களுக்காக நிறைவேற்றி,நல்லாட்சி செய்து கொண்டிருப்பவர் நம் முதலமைச்சர்.

முன்னாள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடியில் போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கூட தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்ற நிலையில் தான் ஆட்சி செய்தார். உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்த்து வேலைவாய்ப்பை பெருக்கியவர் நம் முதலமைச்சர், அந்நிய முதலீடுகளை ஈர்த்து தூத்துக்குடியில்  வின் ஃபாஸ்ட் கார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கக் காரணமாக இருந்து தூத்துக்குடி பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கியதற்கு அப்பகுதி மக்களே உதாரணம். தற்போதைய வெளிநாட்டு பயணம் மூலம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  15,000 கோடிக்கான முதலீட்டை ஈர்த்துள்ளார். அத்தோடு 17,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்துள்ளார்.கடந்த ஆட்சியில் எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டது,எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளீர்கள்? என  வெள்ளை அறிக்கை வெளியிட்டீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.