"அரசுக்கு ஆதரவு அலை வீசுகிறது" - கனிமொழி

 
கனிமொழி

தமிழ்நாடு அரசுக்கு ஆதரவு அலை வீசுகிறது என தி.மு.க எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

Kanimozhi

தி.மு.க செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் அக்கட்சி தலைவரும் முதலமச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், அண்ணல் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்குக் கண்டனம், ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு நிவாரண நிதி வழங்காத ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை - டங்க்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அதிமுகவின் துரோகம் போன்றவற்றை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய திமுக எம்.பி.கனிமொழி, “தமிழ்நாடு அரசுக்கு ஆதரவு அலை வீசுகிறது. 50% வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கும். வீடு வீடாகச் சென்று சாதனைகளை எடுத்துச் சொல்லும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டுக்கே வழிகாட்டும் இயக்கமாக திமுக மாறி இருக்கிறது. மாநில உரிமைகளை மட்டும் பேசிய நிலை மாறி நாட்டுக்கே வழிகாட்டும் இயக்கமாக திமுக மாறியிருக்கிறது.மாநில உரிமைகளை பறிப்பதுதான் பாஜகவின் நோக்கமாக இருக்கிறது” என்றார்.