அரசியல் விளையாட்டு காரணமாக நாளை அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படுகிறது- கனிமொழி

 
அரசியல் விளையாட்டு காரணமாக நாளை அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படுகிறது- கனிமொழி

திமுக இளைஞரணி 2-வது மாநாட்டை பார்க்கும்போது சேலத்திற்கு சுனாமி வந்ததுபோல் உள்ளது, மாநாட்டிற்காக உதயநிதி கடுமையாக உழைத்தார் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

Image


சேலத்தில் நடைபெற்றுவரும் திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் உரையாற்றிய திமுக துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி, “திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாட்டிற்கு மிகப்பெரிய இளைஞர் பட்டாளம் கூடியிருக்கிறது. மாநாட்டை பார்க்கும்போது சேலத்திற்கு சுனாமி வந்ததுபோல் உள்ளது, மாநாட்டிற்காக உதயநிதி கடுமையாக உழைத்தார். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது பற்றி நான் பேச விரும்பவில்லை.

கோயிலை முழுமையாக கட்டி முடிக்காமல் அரசியல் லாபத்திற்காக திறப்பதா? அரசியல் விளையாட்டு காரணமாக நாளை அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படுகிறது. முழுவதும் கட்டி முடிக்கப்படாமல் கோயிலை திறக்கலாமா?  ஒரு கோயிலை முழுமையாக கட்டி முடிக்காமல் திறக்கக்கூடாது என இந்துமதம் சொல்கிறது. வட நாட்டில் உள்ள இருளை அகற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சித்துவருகிறது. பாஜக அரசின் செயல்பாடுகளை கேள்வி எழுப்பினால் .. அவர்கள் ICE(IT,CBI ,ED) வைப்பார்கள். யார் கேள்வி கேட்டாலும் இந்த மூன்றும் தேடி வரும்... இதற்கு எல்லாம் பயப்படக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இல்லை. விரைவில் ஒரு மாற்றம் வரவேண்டும் அது தமிழ்நாட்டில் இருந்து வந்தால் போதாது. மத்தியில் உள்ள ஆட்சியை ஒன்று சேர்த்து மாற்றிக் காட்டுவோம்” என்றார்.