ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒட்டுமொத்த மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி - கனிமொழி

 
அரசியல் விளையாட்டு காரணமாக நாளை அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படுகிறது- கனிமொழி

இந்த வெற்றி தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி என திமுக எம்.பி., கனிமொழி கூறியுள்ளார்.

கட்சிக்காரர் போல் நடக்காமல் நடுநிலையாக நடக்க வேண்டும்" - ஆளுநருக்கு அட்வைஸ்  செய்த எம்.பி கனிமொழி - MP Kanimozhi Slams RN ravi

தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு அனுப்பபடும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்பதல் அளிக்காமல் காலம் தாழ்த்து வருவது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது. அரசமைப்பு சாசனம் 200-வது பிரிவின் படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும். 2வது முறையாக அனுப்பி வைக்கப்படும் மசோதா மாறுபட்டிருந்தால் மட்டுமே ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க முடியும். அமைச்சரவை ஆலோசனைபடியே ஆளுநர்கள் செயல்பட வேண்டும். ஆளுநருக்கு என பொதுவாக தனி விருப்புரிமை இருக்க முடியாது. மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்ததை ஏற்க முடியாது. அரசமைப்பு சாசனம் 200 ஆவது பிரிவின் படி ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதே பல்வேறு தீர்ப்புகளில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


இதனை எக்ஸ் தளத்தில் மேற்கோள் காட்டியுள்ள திமுக எம்.பி., கனிமொழி, “தமிழ்நாடு சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாக்களை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், நிறுத்தி வைத்திருந்த ஆளுநருக்கு எதிராக, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். மாண்புமிகு முதல்வர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த வெற்றி தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி. தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.