சட்டமன்றமே ரீல்ஸ்க்காக நடத்தப்படுகிறது - கனிமொழி எம்.பி.
Updated: Aug 23, 2026, 14:42 IST1787476344013
சட்டமன்றமே ரீல்ஸ்காக தான் நடத்தப்படுகிறது என்ற உணர்வை தருகிறார்கள் என கனிமொழி கருணாநிதி எம்பி பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி கருணாநிதி எம்பி, “தவெக ஆட்சிக்கு வந்தபிறகு தொடர்ந்து குற்றங்கள் பெருகி கொண்டே வருகின்றன. குற்றங்களில் பல குற்றங்களை செய்திருப்பவர்கள் தவெகவினராக இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக இந்த ஆட்சியில் மாறியிருக்கிறது. சட்டமன்றமே ரீல்ஸ்க்காக நடத்தப்படுகிறது என்ற உணர்வை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். காவல்நிலைய மரணங்கள், பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன” எனக் குற்றஞ்சாட்டினார்.

