"சிங்கப்பெண் படையின் அதிகாரம் என்ன?"- கனிமொழி கேள்வி
சிங்கப்பெண் அதிரடிப்படையின் அதிகாரம் வரையறுக்கப்படவில்லை. அவர்களை எப்படி தொடர்பு கொண்டு புகார் தருவது? என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, “பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. குற்றங்களை குறைக்க தவெக அரசு அக்கறை காட்டவில்லை. மூடி மறைக்கும் வேலையை மட்டுமே அரசு செய்கிறது. சிங்கப்பெண் அதிரடிப்படையின் அதிகாரம் வரையறுக்கப்படவில்லை. அவர்களை எப்படி தொடர்பு கொண்டு புகார் தருவது? சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெயர் மாற்றம் செய்யப்பட்ட திட்டம். ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. ஆனால் எந்த பிரச்சனைக்கும் முதலமைச்சர் விஜய் வாய் திறப்பதே இல்லை. பெண்கள், குழந்தைகள் மக்களின் பாதுகாப்பு மீது முதல்வருக்கு எந்த அக்கறையும் இல்லை. நிறைய குற்றச்சம்பவங்களில் ஆளுங்கட்சியினரே ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. தவெகவினர் தனி மனித ஒழுக்கம் மற்றும் தனது கடமைகளிலிருந்து தவறுகின்றனர்” என்றார்.

