"திமுக மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, முதல்வர் பொறுப்புடன் செயல்படுவது எப்போது?"- கனிமொழி
Jun 2, 2026, 15:45 IST1780395318000
சரியான ஆட்சியை நடத்துவதற்கான வழியைப் பார்க்காமல் இன்னும் திமுகவையே விஜய் குறை சொல்லி வருகிறார் என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, “சரியான ஆட்சியை நடத்துவதற்கான வழியைப் பார்க்காமல் இன்னும் திமுகவையே விஜய் குறை சொல்லி வருகிறார்.திமுக மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, முதல்வர் பொறுப்புடன் செயல்படுவது எப்போது? இன்னைக்கு நீங்கள் ஆளுங்கட்சியாக இருக்கிறீர்கள். நீங்கள் சரியான ஆட்சியை நடத்துவதற்கான வழிமுறைகளைதான் கண்டறிய வேண்டும். அதை விடுத்து திமுகவை குறை சொல்லி கொண்டிருந்தால், உங்கள் ஆட்சியில் நடந்து கொண்டிருக்க கூடிய தவறுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை எல்லாம் மக்கள் மறந்து விட மாட்டார்கள்” என்றார்.

