காங்கிரஸ் உடன் மோதலா?- கனிமொழி விளக்கம்
தூத்துக்குடி பாராளுமன்றம் டெல்லியில் உள்ளது ராகுல் காந்தியை அங்கே பார்க்காமல் எங்கே பார்க்க முடியும்? பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் இருக்கிற ஒரு தலைவரை நாடாளுமன்றம் நடக்கும் சமயத்தில் கூட்டணி தலைவரை சந்திப்பதில் என்ன தவறு என்று தெரியவில்லை. அதோடு நான் அவரை சந்திக்கும்போது நான் என்னுடைய முகத்தை எல்லாம் மூடி விட்டு போகவில்லை, நேரடியாகத்தான் போய்விட்டு நேரடியாக தான் வந்தேன் என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி, “நிச்சயமாக இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறதோ இல்லையோ நிச்சயமாக இந்த பட்ஜெட்டில் தமிழகத்தினுடைய பெயர் கேரளாவினுடைய பெயர் மேற்கு வங்கத்தினுடைய பெயர் ஆகியவற்றை அடிக்கடி கேட்கலாம். ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது என்பது இந்த ஆட்சியிலே பிஜேபி ஆட்சியிலே எதையும் எதிர்பார்க்கலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. கூட்டணி தொடர்பாக தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் உடன் எதுவும் பேசவில்லை, கூட்டணி உறுதியாய் இருந்தால் முதலமைச்சர் அவர்கள் நிச்சயமாக உறுதியாக அறிவிப்பார்கள்.
தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக இப்பொழுதுதான் மக்களை சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை கருத்துக்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம். இனிமேல் அதை எல்லாத்தையும் ஒன்றாக வைத்து அதில் எதை எதை ஏற்றுக் கொள்ள முடியுமோ எதை நிறைவேற்ற முடியுமோ அதையெல்லாம் அறிக்கையாக தயாரிக்கப்படும். காங்கிரஸ் காரர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. பாராளுமன்றம் டெல்லியில் உள்ளது ராகுல் காந்தியை அங்கே பார்க்காமல் எங்கே பார்க்க முடியும்? பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் இருக்கிற ஒரு தலைவரை நாடாளுமன்றம் நடக்கும் சமயத்தில் கூட்டணி தலைவரை சந்திப்பதில் என்ன தவறு என்று தெரியவில்லை. அதோடு நான் அவரை சந்திக்கும்போது நான் என்னுடைய முகத்தை எல்லாம் மூடி விட்டு போகவில்லை, நேரடியாகத்தான் போய்விட்டு நேரடியாக தான் வந்தேன்” என்றார்.


