“என் கிட்ட ஏன் கேக்குறீங்க”- செங்கோட்டையன் பற்றிய கேள்விக்கு டென்சனான கனிமொழி

 
kanimozhi kanimozhi

செங்கோட்டையன் ஒன்றும் எங்கள் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணையவில்லை, அவர் எங்கிருந்து சென்று தவெகவில் இணைந்தாரோ அந்த கட்சியை போய் கேளுங்கள் அல்லது அவரை இணைத்து கொண்ட தவெக கட்சியில் போய் கேளுங்கள் என செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பற்றி கனிமொழி எம்பி கூறினார்.

BJP can't stop me from winning polls with I-T raids: Kanimozhi


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  சுடலையா புரம் ,மாதா நகர், பூ பாண்டிபுரம் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி மழை பாதிக்கப்பட்டனர் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இன்று மாலை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மழை நீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்து அந்த பகுதிகளில் செம்மண் அடிக்கப்பட்டு மேலும் தேவையான மின் மோட்டார்கள் அமைத்து மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டனர்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி, “தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்டதாக வந்த தகவலை தொடர்து நேரடியாக வந்து அந்த  பகுதிகளில் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார். செங்கோட்டையன் தமிழக வெற்றிகள் கழகத்தில் இணைந்தது குறித்து கேட்டதற்கு, அவர் எங்கள் கட்சியில் இருந்து போய் சேரவில்லை நீங்கள் இந்த கேள்வியை எங்கிருந்து அவர் போனாரோ அங்கு கேட்க வேண்டும் இல்லை என்றால் அவர் எங்கு போய் இருக்கிறாரோ அங்கு கேட்க வேண்டும் . என்னை கேட்டால்  என்று கனிமொழி எம்பி பதிலளித்தபடி புறப்பட்டார்.